தார் சாலைகளை ஆய்வு செய்த நாமக்கல் ஆட்சியர் !

தார் சாலைகளை ஆய்வு செய்த நாமக்கல் ஆட்சியர் !

ஆட்சியர் ச.உமா ஆய்வு

நாமக்கல் மாவட்டம், மோகனூர், பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (11.5.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் மோகனூர் – இராசிபுரம் முதல் மோகனூர் – வளையப்பட்டி வரை தார்சாலை மேம்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாதிரி பள்ளி அமைக்க ஏதுவாக இடம் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொண்டார். மேலும், நடைபெற்ற 12- ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் குறைந்த சதவீத அளவு தேர்ச்சி பெற்றமைக்கான காரணங்கள் குறித்தும், வருகின்ற கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி அடையும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பரமத்தி வேலூர் வட்டம், வடகரையாத்தூர், மேல்முகம் பகுதியில் பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், கோதூரில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.89.020 இலட்சம் மதிப்பீட்டில் கோதூர் முதல் உத்திகாபாளையம் வரை தார் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story