நாமக்கல் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

நாமக்கல் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்டத்தில் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” (CM MK MKS) திட்டமானது வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் நடப்பு ஆண்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (7.5.2024) மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் முதலமைச்சரின் ”மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டம் செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” (CM MK MKS) திட்டமானது வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் நடப்பு ஆண்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கமானது ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும். மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிர்களைச் சாகுபடி செய்வதாலும். மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இது தவிர, உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிக அளவில் இரசாயன உரங்கள், களைக் கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளமும், நலமும் குன்றியுள்ளன.

நிலங்கள் பாழ்பட்டு அதிக அளவில் களர், உவர், அமில நிலங்களாக மாறியுள்ளன. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மலடான மண்ணைத்தான் நம் எதிர்கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச்செல்லும் நிலை ஏற்படும். வேதிப்பொருட்களின் எச்சம் இல்லாத வேளாண் விளைபொருட்களே நமக்கு நல்லுணவு, அருமருந்து, நல்ல உணவே உடல்நலன் காக்கும்.

“முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகம், மண்புழு உரம் தயாரித்தல் மையம் அமைத்தல், களர், அமில நிலங்களை சீர்படுத்தி பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குதல், வேளாண் பயிர்களுக்கு திரவ உயிர் உரம் வழங்குதல், வயல் சூழல் ஆய்வு மூலம் நன்மை தரும் புச்சிகளைக் கண்டறிந்து நெற்பயிரில் இரசாயன மருந்துகளின் பயன்பாட்டினைக் குறைத்தல், வேளாண் காடுகள் திட்டத்தின் வாயிலாக வேப்ப மரக் கன்றுகள் நடுதலை ஊக்குவித்தல், ஆடாதொடா, நொச்சி நடவுப் பொருட்கள் வழங்கி விவசாயிகளை ஊக்குவித்தல், மரபுசார் நெல் இரகமான சீவன் சம்பாவினை சாகுபடி செய்தல், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம், சிறுதானியங்கள், பயறுவகைகளின் பாரம்பரிய இரகங்களை பாதுகாத்தல், உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணைத் திடல் உருவாக்குதல், உயிர்ம வேளாண்மையை ஊக்குவித்தல், இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் மையம் அமைத்தல், வேளாண் காடுகள் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம், மானாவாரியில் சாகுபடி உள்ளிட்ட திட்டக் கூறுகள் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பேசினார் .

Tags

Next Story