நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் K.P.ராமலிங்கம் பேட்டி

பாஜக ஜாதி, மதம் பார்க்காத கட்சி, பாஜக மீது மத துவேசம் பூசுவதாகவும், நாங்கள் மற்ற மதத்தினரை மதிக்க கூடியவர்கள் பாஜகவினர் !

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டில் ஊழலற்ற, வளர்ச்சியை நோக்கியே பாஜகவின் பிரச்சாரம் அமையும் என்றும் இலவச திட்டங்கள் இல்லாமல் வளர்ச்சி மட்டுமே வேண்டும் என மக்கள் விரும்பும் வகையில் செயல்படும் அரசாக மோடி அரசு இருக்கும் என்றும் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவருமான டாக்டர் K.P. இராமலிங்கம் நாமக்கல்லில் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு நாமக்கல் பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் Dr. K.P. இராமலிங்கத்தை பாஜக அறிவித்துள்ளது.

இதனையடுத்து நாமக்கல்லில் அருள்மிகு நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் Dr. K.P. இராமலிங்கம், சுவாமி தரிசனம் செய்த பின்னர், நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்து, கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவருக்கு பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம், யார் பிரதமராக வர வேண்டும் என நடைபெறும் இந்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என பாரத மக்களில் பெரும்பானமையினர் விரும்புவதாகவும், எனது வெற்றி என்பது நரேந்திர மோடியின் வெற்றி என்றும் கூறினார்.

மேலும் கூற ஏன் மோடி வேண்டும், எதற்காக மோடி வேண்டும், ஏன் தொடர மோடி வேண்டும் என்பதை முன்னிறுத்தியும், நாட்டில் ஊழலற்ற, வளர்ச்சியை நோக்கியும் எங்களது பிரச்சாரம் அமையும், அரசாங்கத்தின் இலவச திட்டங்கள் இல்லாமல் வளர்ச்சி மட்டும் வேண்டும் என மக்கள் விரும்பும் வகையில் செயல்படும் அரசாக மோடி அரசு இருக்கும், சேலம்- கரூர் அகல இரயில் பாதை திட்டம், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு 1982-ல் கோரிக்கை வைத்து அது கொண்டு வர பாடுபட்டதாகவும், தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பேன், கட்சியின் கட்டளைக்கு ஏற்ப இத்தேர்தலில் போட்டியிடுவதாகவும், நடைபெறும் தேர்தல் யார் பிரதமர்?, மோடி தேவையா?, இல்லையா? என்பது தான் என்றார். அண்ணா, கலைஞரும் ஆரம்பிக்காத அணிகளை இப்போதுள்ளவர்கள் ஆரம்பித்து உள்ளதாகவும், அதில் உள்ளவர்கள் போதை பொருள் கடத்துபவர்களா மாறி உள்ளனர்.

வேட்பாளரை மாற்றி விட்டால் அவர்களது கொள்கை, கோட்பாடு மாறி விடுமா? அவர்கள் பேசிய கருத்து மாறி விடுமா? என நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். மேலும், பாஜக ஜாதி, மதம் பார்க்காத கட்சி, பாஜக மீது மத துவேசம் பூசுவதாகவும், நாங்கள் மற்ற மதத்தினரை மதிக்க கூடியவர்கள். பொன்முடி வழக்கில் பாஜகவின் தலையீடு இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது, வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திலே வி.ஐ.பி வேட்பாளர்களை பாஜக களம் இறக்கி உள்ளதாகவும் நாமக்கல் பாஜக வேட்பாளரும் கட்சியின் மாநில துணைத் தலைவருமான டாக்டர் K.P. இராமலிங்கம் தெரிவித்தார். பேட்டியின் போது நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர்கள் N.P. சத்தியமூர்த்தி, M. இராஜேஷ்குமார், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story