நாமக்கல்:சிப்காட் திட்டத்தை எதிர்த்து காதில் பூ வைத்து நூதன ஆர்ப்பாட்டம்

சிப்காட் அமைத்தால் விவசாய நிலம் பாதிக்கும், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவே சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் பூங்கா சாலையில் விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு குழுவினர் காதில் பூ வைத்து முழக்கங்களை எழுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் வளையபட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 820 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்கான முயற்சியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சிப்காட் திட்டத்தை எதிர்த்து சிப்காட் எதிர்ப்பு குழுவினர், விவசாயிகள், விவசாய முன்னேற்றக் கழகத்தினர் பல்வேறு போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிப்காட் அமைத்தால் விவசாய நிலம் பாதிக்கும், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவே சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் பூங்கா சாலையில் விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு குழுவினர் காதில் பூ வைத்து முழக்கங்களை எழுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி வரும் ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலையப்பட்டி, புதுப்பட்டி, அரூர், பரளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் காதில் பூ வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். விவசாயிகள் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் பழனிவேல், சரவணன், ராமசாமி, தண்டபாணி, ரவி உள்ளிட்ட திரளான ஆண்களும், பெண்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story