நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துண்டு பிரசுரங்கள் வழங்கி வேண்டுகோள்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துண்டு பிரசுரங்கள் வழங்கி வேண்டுகோள்

துண்டு பிரசுரங்கள் வழங்கிய ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துண்டு பிரசுரங்கள் வழங்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு 'தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்" என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி ஸ்டேண்ட் பார்வையிட்டு பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும், தேர்தல் நாள் அன்று வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணிகளுக்கு வழங்கினார். அதனைத்தொடர்ந்து,

சங்ககிரி வட்டம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வைகுந்தம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story