நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கலைச் சங்கமம் கிராமியக் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து, 50 கிராமியக் கலைஞர்களுக்கு தலா ரூ.3,000/- பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கலைச் சங்கமம் கிராமியக் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து, 50 கிராமியக் கலைஞர்களுக்கு தலா ரூ.3,000/- பரிசுத்தொகை மற்றும்  கேடயங்களை வழங்கினார்.
X

நாமக்கல்


நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று (29.3.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கலை பண்பாட்டுத் துறையின், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில், கலைச் சங்கமம் கிராமியக்கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து, 50 கிராமியக் கலைஞர்களுக்கு தலா ரூ.3,000/- பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் நலிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை பேணிக்காத்திடவும், மேம்படுத்திடவும் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கலை பண்பாட்டுத் துறை சார்பில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை வழங்கி வருகின்றார்கள். மேலும், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு, தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம் உள்ளிட்ட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நம்ம ஊரு திருவிழா நடத்தி வருகின்றார்கள்.


அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில், கலைச் சங்கமம் கிராமியக் கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து, 50 கிராமியக் கலைஞர்களுக்கு கேடயங்கள் மற்றும் தலா ரூ.3,000/- பரிசு தொகையை வழங்கி, கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.


இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் திரு.து.கலாநிதி, நாமக்கல் இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் கலைமாமணி த.சேகர் உட்பட கிராமிய கலைஞர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story