நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தகவல்!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தகவல்
கல்வி கடன் முகாம் நடைபெறுவதையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளை அவசியம் ஞானமணி கல்லூரிக்கு வரவேண்டும் என ஆட்சியர் உமா தகவல்
நாளை ஞானமணி கல்லூரி வளாகத்தில் கல்வி கடன் முகாம்! இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்ட நிருவாகமும் மாவட்ட முன்னோடி வங்கியும் (இந்தியன் வங்கி) இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் அனைத்து வங்கிகளின் சார்பில் நாளை (பிப்ரவரி 15) காலை 9.00 மணி அளவில் ஞானமணி கல்லூரி வளாகத்தில் (NH -7) பாச்சலில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே நாமக்கல் பாவை கல்லூரி, ஞானமணி கல்லூரி, திருசெங்கோடு விவேகானந்தர் கல்லூரி, KSR கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட கல்விக் கடன் விண்ணப்பங்களில் தகுதியான மாணவர்களுக்கு ஒப்புதல் ஆணை வழங்கப்படுகிறது. மேலும் முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் புதிதாக கல்விக் கடன் பெற விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கல்வி கடனுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆதார், பான்கார்டு மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்களுடன் கலந்து கொண்டு தங்கள் விண்ணப்பங்களை www.vidyalakshmi.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பான்கார்டு இல்லாத மாணவர்கள் ஆதார் நகல் மற்றும் 2 புகைப்படங்கள் எடுத்து வந்தால் முகாம் நடைபெறும் இடத்திலேயே இ- சேவை மையம் மூலமாக பான்கார்டுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். புதிய சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி, கடன் தொடர்பான வங்கி உதவி மைய சேவை வசதிகளும் இந்த முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடியாக கல்வி கடன் அனுமதி வழங்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.
Next Story