நாமக்கல் மாவட்டத்தில் எம்பி ராஜேஷ்குமார் பேட்டி

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற ஆர்வமாக உள்ளனர் என எம்பி ராஜேஷ்குமார் பேட்டி அளித்தார்.
ராசிபுரத்தில் பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் பேட்டி. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கட்டணாச்சம்பட்டி பகுதி ஊராட்சி சேவை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 79ல், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக., செயலாளரும், பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினருமான கே. ஆர். என். ராஜேஷ்குமார் வாக்கு செலுத்தினார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி மக்கள் மிகவும் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு வாக்காளர்களும் தனது ஜனநாயக கடமையாற்ற வரிசையாக நின்று வாக்களித்து வருவதை மாவட்டம் முழுவதும் பார்த்து வருகிறேன். இந்திய நாட்டின் ஜனநாயகத்தை காக்க, வளமான இந்தியாவை உருவாக்க மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றார்.

Tags

Next Story