நாமக்கல் மாவட்ட சிலம்பம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
நாமக்கல் மாவட்ட சிலம்பம் சங்கத்தின், 7வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு
நாமக்கல் மாவட்ட சிலம்பம் சங்கத்தின், 7வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்ட சங்கத்தின் 7வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் ராசிபுரம் தூய இருதய மழலையர் துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தின் சிலம்பம் சங்கத்தின் புதிய செயலாளராக பன்னீர் தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தூயமணி, சிலம்பம் இந்திய பொதுச் செயலாளர் நாகராஜ், போட்டி இயக்குனர் சதிஷ்குமார், அமைப்புச்செயலாளர் ரங்கத்துரை, உயர்மட்ட குழு காசிநாதன் மற்றும் சிலம்பம் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் பன்னீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் மாநிலத் தலைவர் சந்திரமோகன் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட போட்டிகள் நடத்தப்படும். வரும் செப்டம்பர் மாதம் மாநிலப் போட்டிகள் நடத்தப்படும். சிலம்பம் இந்திய சங்கம், உலக சிலம்பம் சங்கத்தோடு சேர்ந்து ஐநா.,வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருடம்தோறும் ஐநா.,விற்கு செலுத்த வேண்டிய தொகையை செழுத்தி வருகிறோம். 14 மாவட்டங்கள் எங்கள் சங்கத்தோடு பதிவு செய்துள்ளது. சிலம்பம் விளையாட்டு விரைவில் தேசிய விளையாட்டாக மாற உள்ளது. இதற்காக மத்திய விளையாடத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தில் விரைவில் அங்கீகாரம் கிடைக்கும். உலக சிலம்பம் சங்கத்திற்கு ஒலிம்பிக்கில் விளையாட அங்கீகாரம் கிடைக்கும் என்றார். சிலம்பத்திற்கு என்று நல வாரியம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்எங்களுக்கென்று தனியாக நலவாரியம் இல்லை. விளையாட்டு பிரிவாக இருப்பதால் விளையாட்டு ஆணையத்தில் சேர்த்திருக்கிறார்கள். முதல்வர் சிலம்பத்திற்கு இட ஒதுக்கீடு செய்துள்ளார். விளையாட்டுப் பிரிவில் சிலம்பத்திற்கு என்று மொத்த ஒதுக்கீட்டில் மூன்று சதவீதம் உள் ஒதுக்கீடு செய்துள்ளார். அந்த இட ஒதுக்கீட்டை எந்த அடிப்படையில் அளித்துள்ளார் எந்த சங்கத்திற்கு ஒதுக்கி உள்ளார் என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்குத் தெளிவான பதிலை கொடுத்தால் அந்த விளையாட்டு அமைப்பை அணுகி பயன்பெறும் மாணவ மாணவியர்களை அண்ணா பல்கலைகழகத்திலோ அல்லது வேறு கல்லூரிக்கும் செல்வதற்கு வாய்ப்பாக இருக்கும். அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் எந்த முறையில் கொடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அவர்களும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் அறிவிப்பாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் என்று கூறினார்.
Next Story