நாமக்கல் மாவட்ட வணிகர்கள் இயன்றவரை ரயிலில் பயணம் செய்ய வேண்டுகோள்

நாமக்கல் மாவட்ட வணிகர்கள் இயன்றவரை ரயிலில் பயணம் செய்ய வேண்டுகோள்

வணிகர் சங்க நிர்வாகிகள்

நாமக்கல் புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு ரயில் வரும் நேரங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட இரயில் உபயோகிப்பார்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் தங்கராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். நாமக்கல் மாவட்ட இரயில் உபயோகிப்பார்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், சிறப்பாக செயல்பட்டுவரும் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். வணிகர்கள் இயன்றவரை இரயிலில் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, இரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இரயில் நிலைய வசதிகளுக்காக நிறைய சலுகைகளையும், புதிய வழிதடங்களையும் இரயில்வே நிர்வாகத்திடம் நாம் கேட்டுப்பெற முடியும் என தெரிவித்தார். கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, நாமக்கல் வழியாக வந்தே பாரத் இரயில் போக்குவரத்து இயக்கப்படும்போது நாமக்கல் இரயில் நிலையத்தில் நிறுத்தம் கோருவது, விரைவில் தொடங்கவுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இரயில் நிலையத்திற்கு இரயில் வரும் நேரங்களில் பேருந்துகளை இயக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை வலியுறுத்துவது, இரயில் பயன்பாட்டை அதிகரிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் மரக்கடை அருண்குமார் மற்றும் நாமக்கல் மாவட்ட இரயில் உபயோகிப்பார்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story