பரமத்தி வேலூரில் அதிகாரிகள் ஆய்வு.

பரமத்தி வேலூரில் அதிகாரிகள் ஆய்வு.

அதிகாரிகள் ஆய்வு

பரமத்தி வேலூர் அருகே தொட்டங்குச்சி அரைக்கும் ஆலையில் நாமக்கல் சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.ராசாம்பாளையத்தில் இருந்த அரிசி அரைக்கும் ஆலையை பரமத்திவேலுார் தாலுகா, படமுடிபாளையத்தை சேர்ந்த வளர்மதிசெந்தில் என்பவர் தொட்டாங்குச்சி அரைக்கும் ஆலையாக மாற்றி தொட்டாங்குச்சியுடன் பல்வேறு ரசாயன கலவைகளை கலந்து பவுடர் ஆக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்.

அங்கு காற்று மாசு ஏற்படுவதாலும், அதிக ஒலி எழுப்புவதாலும் அருகாமையில் மக்கள் யாரும் தூங்க முடியாமலும், பள்ளி மாணவ, மாணவிகள் படிக்க முடியாமலும் கண் எரிச்சல், அலர்ச்சி, இருமல் மற்றும் செவித்திறன் பாதிப்பு, சுவாச பாதையில் பாதிப்பு, நுரையீரல் தொற்றால் பாதிப்பு ஆகியவற்றால் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் தொட்டாங்குச்சி அரைக்கும் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஸ்குமார், மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரகுநாதன், உதவிப் பொறியாளர் கார்த்திக் குமுதன் உட்பட துரை சார்ந்த அலுவலர்கள் கே.ராசாம்பாளையத்தில் உள்ள தொட்டாங்குச்சி அரைக்கும் ஆலையை வந்து ஆய்வு செய்தனர். பின்னர் உரிய உத்தரவு வரும் வரை ஆலையில் ஏந்தவித பணிகளையும் தொடங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story