நாமக்கல்லில் எப்.சி. இன்றி இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல்லில் எப்.சி. இன்றி இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல்லில் எப்.சி. இன்றி இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல்லில் எப்.சி. இன்றி இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல்

எப்.சி. மற்றும் இன்சூரன்ஸ் சர்டிபிகேட் இல்லாமல் இயக்கப்பட்ட 5 வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டு, நாமக்கல் வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரில், எப்.சி. சான்று மற்றும் இன்சூரன்ஸ் சான்று இல்லாமல் இயக்கிய, 5 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

சென்னை போக்குவரத்து கமிஷனர் உத்தரவின்படியும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிவுரையின் பேரிலும், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர், கடந்த, இரண்டு நாட்களாக, நாமக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில், திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஹெல்மெட் அணியாமல் டூ வீலர் ஓட்டிச்சென்ற குற்றத்திற்காகவும், மொபைல் போன் பேசியபடி, வாகனத்தை இயக்கியதற்காகவும், சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக பாரம் ஏற்றி சென்றதற்காகவும், தகுதி சான்று (எப்.சி) மற்றும் இன்சூரன்ஸ் சான்று இல்லாமல், வாகனத்தை ஓட்டியதற்காகவும், இணக்க கட்டணமாக ரூ. 5.37 லட்சம் மற்றும் வரியாக ரூ. 51 ஆயிரத்து 100 வசூல் செய்யப்பட்டது. மேலும், ரூ. 52 ஆயிரத்து 400 வரி நிர்ணயம் செய்யப்பட்டது. எப்.சி. சான்று மற்றும் இன்சூரன்ஸ் சான்று மற்றும் வரி செலுத்தாமல் இயக்கிய குற்றத்திற்காக, 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story