நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவிலில் நாளை குருபெயர்ச்சி விழா

நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவிலில் நாளை குருபெயர்ச்சி விழா

சாமி தரிசனம் செய்த மக்கள்

நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவிலில் நாளை குருபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

சித்திரை மாதம் 18-ம் தேதி நாளை( 01-05-2024) புதன்கிழமை அன்று குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாலை 5.19 மணிக்கு மேல் பிரவேசிக்கிறார். அதனை முன்னிட்டு, நாமக்கல் கோட்டை பிள்ளையார் ஆலயத்தில் உள்ள குருபகவான் என்கிற ( பிரகஸ்பதி) ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கும், ஸ்ரீ பாலமுருகனுக்கும்,

ஸ்ரீ துர்க்கைக்கும் நூதனமாக தங்க கவசம் சாத்தப்படுகிறது. அதே சமயம் 108 சங்கு (வலம்புரி) அபிஷேகம் சிறப்பு யாகமும் நடைபெற உள்ளது. மேலும் நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் குரு பகவான் மூலமந்திர ஹோமம் நடக்கிறது. பின்னர் பால், நெய், இளநீர், தேன், பன்னீர் மற்றும் 11 வகையான திரவியங்களால் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இப்பூஜையில் கலந்து கொள்ளவேண்டிய ராசிகாரர்கள் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் கட்டளைக்கு நபர் 1-க்கு ரூ.101/- செலுத்தி பெயர், நட்சத்திரம், ராசி பதிவு செய்து கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு கோட்டை பிள்ளையார் கோவில் அர்ச்சகர் : சிவஸ்ரீ S. மணிவண்ணன் சிவாச்சாரியார் (94437 49211) தொடர்பு கொள்ளவும். குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை ரவீந்திரன் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story