நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச் சேர்க்கை - ஆட்சியர் மருத்துவர் ச.உமா தகவல்

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச் சேர்க்கை - ஆட்சியர் மருத்துவர் ச.உமா தகவல்

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச் சேர்க்கை - ஆட்சியர் மருத்துவர் ச.உமா தகவல்

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச் சேர்க்கை - ஆட்சியர் மருத்துவர் ச.உமா தகவல்

நாமக்கல், ஜுலை 24 –

தமிழ்நாடு அரசு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி/தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி/டிப்ளமோ பெற்ற மாணவர், மாணவியர்களுக்கான நேரடிச் சேர்க்கையானது 31.07.2024 வரை நடைபெற உள்ளது. நாமக்கல் அரசு ஐ.டி.ஐ-ல் இரண்டு ஆண்டு பயிற்சிகளான எலக்ட்ரீசியன் (Electrician), டிராப்ட்ஸ்மேன் (சிவில்) (Draughtsman Civil), மெஷினிஸ்ட் (Machinist) - (இருபாலர்) & ஓராண்டு பயிற்சியாக மெக்கானிக் ஆட்டோபாடிரிப்பேர் (இருபாலர்) போன்றவற்றிக்கும்,

பெண்களுக்கு மட்டும் ஓராண்டு பயிற்சியாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்& புரோகிராமிங் அசிஸ்டென்ட் (C.O.P.A.) ஈராண்டு பயிற்சியாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்கள் பராமரிப்பு (I.C.T.S.M.) பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2023 ஆண்டில் புதிதாக துவங்கப்பட்டுள்ள Industry 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய தொழிற்பிரிவுகளான (இருபாலர்) 1. Mechanic Electric Vehicle (கம்மியர் மின்சார வாகனம்) – ஈராண்டு, 2. Industrial Robotics and Digital Manufacturing Technician (தொழிற்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்ப உற்பத்தி வல்லுநர்கள்) –ஓராண்டு, 3. Advanced CNC Machining Technician (மேம்பட்ட CNC இயந்திர தொழில் நுட்ப வல்லுநர்கள்) (இருபாலர்) - ஈராண்டு. போன்ற தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியின் போது OJT (On-The Job Training), Internship Training & Industrial Visit) வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்த பின் Campus Interview (வளாக நேர்காணல்) மூலமாக 100% வேலை வாய்ப்பு பெற்று தரப்படும். இப்பயிற்சியின் பொழுதே, ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 மதிப்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் கூடுதல் திறன் கொண்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகளில் இறுதியில் மத்திய அரசால் தேசிய தொழிற்சான்று (என்டிசி) வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்று அகில இந்திய அளவிலும் மற்றும் மேலைநாடுகளில் வேலைவாய்ப்பு பெறவழி வகிக்கிறது. இந்த என்டிசி சான்று ஆனது அரசு பணிகளில் சேர குறிப்பாக போக்குவரத்து கழகங்களில் மற்றும் நெடுஞ்சாலை துறை, ஐடிஐ-க்களில் ஆசிரியர்களாக நிரந்தர அரசுப்பணியாளர்களாக சேர தகுதியாக இருக்கும்.

இப்பயிற்சிகளில் சேர, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற முறையில், நேரடியாக அரசு ஐ.டி.ஐ நாமக்கல்லிலுள்ள வந்து அன்றே பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04286-29959, 04286-267876, 9499055844 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பிற விவரங்களை பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story