நாமக்கலில் வரலாற்று கோட்டை !

நாமக்கலில் வரலாற்று கோட்டை !

நாமக்கல் மலைக்கோட்டை 

நாமக்கல் மாவட்டம் நாமக்கலில் உள்ள கோட்டை வரலாற்று சிறப்புமிக்க கோட்டையாகும். இந்த கோட்டை 246 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன மலைக்கோட்டையாகும். இக்கோட்டையினுள் மிக அழகிய திருமால் கோயில் ஒன்றும் மசூதியும் உள்ளது இக்கோயில் மட்டுமின்றி பண்டையசின்னம் உள்ள ஒரு கட்டடமும் காணப்படுகிறது . இது மலைக்கோட்டை இதுவும் வேலைப்பாடு உள்ளதாய் காணப்படுகிறது உட்பகுதியில் வீரர்கள் தங்குவதற்குரிய இடம் போல் அமைந்திருக்கிறது தென்பகுதியில் மலையின் மேல் ஏறுவதற்கு சரிவின் மீது படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன கோட்டையின் மேற்பகுதியில் மழை நீர் தங்கி இருப்பதற்காக பாழிகள் வெட்டப்பட்டுள்ளனர் இவை கோட்டைக்குள் இருப்போருக்கு பயன்படுகின்றன கீழ்பாதியில் கோடைகாலத்தில் கூட நீர் நிறைந்திருக்கும் இதனை இன்றி கோட்டையின் தென்பகுதியிலும் சில பாழிகள் உள்ளன பண்டைய காலத்தில் கோட்டையின் வடக்கு பகுதியில் ஆபத்து ஏற்பட்ட போது தப்பி செல்வதற்காக ரகசிய வழி ஒன்றும் உள்ளது இங்கு கண்ணறைகள் பல உள்ளன அவ்வறைகளின் வழியாக வீரர்கள் பகைவர்களை பார்த்து அறிவதற்குரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது அவற்றோடு நில அறைகளும் உள்ளன பாறைகளில் சிறுசிறு குழிகள் காணப்படுகின்றன அவற்றில் தண்ணீர் தேங்கி இருக்கும் .அக்குளிகளில் ஒன்று பெரிய குளம் போல் அமைந்திருக்கிறது அக்குளத்தை 'கமலாலயம்' என்று கூறுவார்கள் அதில் உள்ள நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர் அதன் அருகில் நீராழி மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது நாமக்கல் கோட்டை பகுதிகள் மைசூர் அரசர் ஆட்சியின் கீழ் இருந்தபோது 'வுட்' என்னும் ஆங்கில தளபதி ஹைதர் அலியிடம் இருந்து இதை கைப்பற்றினார் என்றும் மீண்டும் ஹைதர் அலியே இக்கோட்டையை திரும்ப பெற்றுவிட்டார் என்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய சிப்பாய்கள் இங்கே இருந்தார்கள் என்றும் கூறப்படுகின்றன பண்டைய கால சின்னங்களுக்கு இம்மலைக்கோட்டை எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

Tags

Next Story