நாமக்கல் - டிரினிடி மகளிர் கல்லூரியில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்

நாமக்கல் - டிரினிடி மகளிர் கல்லூரியில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்

 சுதந்திர தினம்

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 78-வது சுதந்திர தினம் 15.08.2024 அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் கே. நல்லுசாமி தலைமை தாங்கினார். முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் அனைவரையும் வரவேற்றார். செயலர் எஸ். செல்வராஜ் மூவர்ணக் கொடியினை ஏற்றினார்.

நாமக்கல் - தங்கம் மருத்துவமனை மற்றும் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் முதன்மை இயக்குநர் ஆர். குழந்தைவேல், கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்திய இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் மரு. கே. ரமேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சுதந்திர இந்தியாவின் 78 கால வளர்ச்சியினையும், கல்வி, விவசாயம், மருத்துவம், இராணுவம் மற்றும் சேவைத் துறைகளில் நம் நாடு அடைந்த முன்னேற்றங்களையும் எடுத்துரைத்தனர்.

சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக கல்லூரியின் குயிஸ் கிளப் நடத்திய வினாடி வினாரூபவ் பிடித்த சுதந்திரப் போராட்ட வீரர்ரூபவ் இந்தியா – நேற்று - இன்று – நாளை ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு இந்நிகழ்வில் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கல்லூரி வெள்ளி விழா கொண்டாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன், நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார், குயிஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் ஏ. லதா, ஜி;. சத்தியசங்கரி, உடற்கல்வி இயக்குநர் வீ. அர்ச்சனா, நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் பி. விஷ்ணுப்பிரியா உட்பட துறைத்தலைவர்கள், பேராசிரியப் பெருமக்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை கல்லூரியின் உடற்கல்வித் துறையுடன், நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தின.

Tags

Next Story