நாமக்கல்லில் காதலர் தின பரிசுப் பொருட்கள் விற்பனை மும்முரம்

நாமக்கல்லில் காதலர் தின பரிசுப் பொருட்கள் விற்பனை மும்முரம்
நாமக்கல்லில் காதலர் தின பரிசு பொருட்கள் விற்பனை மும்முரம் இருந்தது. காதலர் தினம் நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் பரிசு பொருட்களை வழங்கி மகிழ்வார்கள். ரோஜா பூக்கள், பூங்கொத்து, சாக்லெட், அழகிய பொம்மை, கீச்செயின் போன்றவற்றையும் வழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். இதனால் நாமக்கல்லில் உள்ள கிஃப்ட் ஷாப் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் இன்று காதலர் தின பரிசு பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. அவற்றை கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story