நீட் தேர்வில் நாமக்கல் குறிஞ்சி நீட் அகாடமி மாணவர்கள் சாதனை !
மாணவர்களுடன் பயிற்சி மைய நிர்வாகிகள்
நாமக்கல் குறிஞ்சி நீட் அகாடமியில் மாணவ மாணவியர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஓராண்டு கால நீட் பயிற்சி கற்பிக்கப்பட்டு வருகிறது, இதில் 200 மாணவ மாணவிகள் பயின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் குறிஞ்சி நீட் அகாடமியில் 2023-2024 இல் பயின்ற அனுசுயா, ரத்தீஷ் ஆகிய இரு மாணவர்கள் 720 க்கு 665 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், குறிஞ்சி நீட் அகாடமி முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ என்ற மாணவி 617 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், தீரஜ் சாம், என்ற மாணவர் 596 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பள்ளி தாளாளர் இயக்குனர்கள் ஆகிய ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர 30 மாணவ மாணவியர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கட்டண சலுகையுடன் தற்போது நீட் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆண் பெண் இரு பாலருக்கும் தனித்தனி விடுதி வசதி மற்றும் அனைத்து வழித்தடங்களுக்கும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என பள்ளி தாளாளர் தெரிவித்துள்ளார்.