நாமக்கல் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

நாமக்கல் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

ராஹா தமிழ்மணி

வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் திருவிழா ஊர்வலத்தில் மக்களுடன் மக்களாக சேர்ந்து நடனம் ஆடிய நாமக்கல் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராஹா தமிழ்மணி.
நாமக்கல் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராஹா தமிழ்மணி இன்று பரமத்தி பேராட்சி பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் பரமத்தி அருகே உள்ள கூடச்சேரி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கூடச்சேரி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு தீர்த்த குடங்கள் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அங்கு வந்த வேட்பாளர் ராஹா தமிழ்மணி பக்தர்களுடன் சேர்ந்து நடனமாடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்மணி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவந்த மக்களுடன் மக்களாக சேர்ந்து நடனமாடியதை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story