நாமக்கல்:மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம்!

கும்பாபிஷேகத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஆனந்த்குமார், நாமக்கல் நகராட்சி துணைத் தலைவர் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் - LMR தியேட்டர் பின்புறம் உள்ள R.P.புதூர் காலனியில் புதுப்பிக்கப்பட்ட மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. காலை 6:00 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாக சால பூஜை, பூர்ணாஹீதி , கடம் புறப்பாடாகி 10 மணிக்கு மூல கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஆனந்த்குமார், நாமக்கல் நகராட்சி துணைத் தலைவர் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் சார்பில் மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டதது. வார்டு முன்னாள் செயளாலர் K.ராமசாமி, R .சுரேஷ்குமார் இல்லத்தில் விருந்தும் உபசரிப்பும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொ.மு.ச உறுப்பினர் M.சிவன், S.ஐசக், செ.பாண்டியன், வடிவேல் மற்றும் வசந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story