தொடர் சிலம்பம் சுற்றுதல் நிகழ்ச்சியில் நாமக்கல் நவோதயா அகாடமி பள்ளி மாணவி உலக சாதனை !!
நவோதயா அகாடமி பள்ளி
தொடர் சிலம்பம் சுற்றுதல் நிகழ்ச்சியில் நாமக்கல் நவோதயா அகாடமி பள்ளி மாணவி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்திய நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் குன்னூர் வெலிங்டன் மைதானத்தில் தேசிய சிலம்பம் மேம்பாட்டு ஆணையம், மற்றும் வஜ்ரம் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு ஆணையம் இணைந்து நடத்திய தொடர் சிலம்பம் சுற்றுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் அதில் நமது நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவி ஜே. எஸ். வேதா ஸ்ரீவர்ஷா கலந்துகொண்டு 78 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி ராயல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இன்று 30.09.2024 பள்ளியில் நடைபெற்ற காலை வழிப்பாட்டுக் கூட்டத்தில் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பள்ளியின் பொருளாளர் தேனருவி அவர்கள் பேசுகையில் "இந்த மாணவி 'இந்த மாணவி சின்ன வயதிலேயே சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இன்னும் பல உலக சாதனைகளை நிகழ்த்துவார் என்று நம்புகின்றேன். சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிறுபித்துவிட்டார். மாணவி வேதாஸ்ரீ வர்ஷாவை அனைவரும் முன் மாதிரியாக எடுத்தக்கொள்ளுங்கள் என்று கூறி வாழ்த்தினார். முதல்வர், ஆசிரியர்கள், சக, மாணவ, மாணவியர்கள் அனைவரும் வாழ்த்துகள் கூறி பாராட்டினார்கள்.