நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவப் பேரவைத் தேர்தல்
மாணவப் பேரவைத் தேர்தல்
நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் இன்று காலை 9.00 மணியளவில் மாணவப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு பள்ளி பொருளாளர் அவர்கள் தலைமையேற்றார். “அவர் பேசுகையில் மாணவர்கள் தலைசிறந்த தலைவர்களாக உருவாக வேண்டும் என்றும் அப்துல்கலாமைப் போல், காமராசரைப் போல் தலைமைப் பண்பை வளர்த்து கொள்ள வேண்டும் என்று வாழ்த்துக் கூறினார்”. சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் திரு. மோகன்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார். “அவர் பேசுகையில் மாணவர்கள் ஜனநாயக உரிமை, கடமைகளை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். அடிப்படை மனித உரிமைகளையும், கடமைகளையும் கண்டிப்பாக சட்டத்தின் படி அறிந்திருக்க வேண்டும் என்றும்” தேர்தலில் போட்டியிடும் மாணவர்கள், வாக்களிக்கும் மாணவர்கள் மற்றும் இந்த ஏற்பாடுகளை செய்த பள்ளி நிர்வாகத்திற்கும், முதல்வருக்கும் நன்றி கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முதல் வாக்கினைப் பள்ளி பொருளாளர் திரு. தேனருவி அவர்கள் செலுத்தினார். இரண்டாவது வாக்கினைப் சிறப்பு விருந்தினர் செலுத்தினார். மூன்றாவது வாக்கினை பள்ளி முதல்வர் செலுத்தினார். பின்பு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும் வரிசையில் நின்று தனித்தனியாக வாக்களித்தனர், மற்றும் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள், ஓட்டுனர்கள், ஆயாக்கள் என அனைவரும் வாக்களித்தனர். காலை 9.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் 3.00 மணியளவில் நிறைவடைந்தது.
இந்த தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தால் பின்பற்றப்படும் அனைத்து விதிமுறைகளையும் மிகவும் நேர்த்தியாக முறையாக பின்பற்றப்பட்டு, வாக்கு பெட்டிகள் பள்ளியில் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.