நாமக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிமனை கால்கோள் விழா

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தேர்தல் பணிக்கான பணிமனை பூமி பூஜை நடைபெற்றது
நாமக்கல், சேலம் சாலை, முருகன் கோவில் அருகில் திமுக கூட்டணியில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தேர்தல் பணிக்கான பணிமனை பூமி பூஜை இன்று நடைபெற்றது. கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். உடன் திமுக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் , மாநிலங்களவை உறுப்பினருமான KRN ராஜேஷ்குமார் MP, மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், KMDK துணை பொதுச்செயலாளர் AKPசின்ராஜ், மாநில விவசாய அணி இணை செயலாளர் DS சந்திரசேகர், மாநில செயற்குழு உறுப்பினர் RSR துரை, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கார்த்திகேயன், நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், உள்ளிட்ட திமுக மற்றும் கொமதேக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story