நாமக்கல்: மக்கள் குறை தீர் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல்: மக்கள் குறை தீர் கூட்டம் -  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் உமா (பைல் படம்)

தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்தால் இனி வழக்கம்போல் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் வழக்கம் போல் மக்கள் குறைதீர்ப்புக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... 2024-ம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததையடுத்து 2024-ம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றதால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பிரதி வாரம் திங்கள் கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (ஜூன்- 10) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறும் என்றும், இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story