கார் மோதியதில் பைக்கில் சென்ற முதியவர் பலி

கார் மோதியதில் பைக்கில் சென்ற முதியவர் பலி
X

கார் மோதியதில் முதியவர் பலி

கூலி தொழிலாளியான முதியவர் உயிரிழப்பால் உறவினர்கள் சோகம்

நாமக்கல் அருகே கார் மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மல்லசமுத்திரம் அருகே மதியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் (73) கூலி தொழிலாளி. இவர் மாலை 6மணியளவில் அவரது எக்ஸல் சூப்பர் இருசக்கர வாகனத்தில் வையப்பமலை இருந்து மல்லசமுத்திரம் நோக்கிசெல்லும்போது, சுண்டாங்கிபாளையம் பிரிவுசாலை அருகில் பின்னால் வந்த கார் மோதியது. அதில், செங்கோட்டையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story