வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆர்டிஓ அறிவுறுத்தல்

ஆய்வறிக்கை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது . மேலும் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி, பராமரிப்பு பணிகள் ஆகியவை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட இரண்டு பணிகளும் மிகத் தொய்வான முறையில் நடப்பதால் நகராட்சி பகுதி பொதுமக்கள் பாதிப்புக்கு உல்லாவதாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர் செல்வராஜ் ,துணைத் தலைவர் பாலமுருகன், ஆகியோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்களுக்கு மனு வழங்கிய நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் நகரமன்ற தலைவர், துணைத் தலைவர், நகராட்சி அதிகாரிகள், அம்ரூத் திட்ட ஒப்பந்ததாரர்கள், பாலம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.
இதில் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அம்ரூத் திட்ட பணிகளும், மேம்பால பணிகளும் மிகத் தொய்வாக நடப்பதால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.மேலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது அவசர தேவைக்கு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென நகர மன்ற தலைவர், துணை தலைவர் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ,தேக்க நிலையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி அவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தி பேசினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
