நாமக்கல் : கோடையை குளிர்வித்த மழை...!

நாமக்கல்லில் காற்று மற்றும் மின்னலுடன் பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.
நாமக்கல் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்தது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. டூவீலர்களில் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் நேற்று கத்திரி வெயில் உக்கிரத்தை கக்கியது நேற்று முதல் வெப்ப தாக்கம் அதிகமிருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலையில் பலத்த காற்று வீசியதுடன் சாரல் மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நின்றது.கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மிதமாக பெய்த மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story