நாமக்கல் டிரினிட்டி கல்லூரியில் மாணவிகள் பொங்கல் கொண்டாட்டம்!!

டிரினிட்டி கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்!
நாமக்கல் - டிரினிடி மகளிர் கல்லூரி மாணவியர் பொங்கல் கொண்டாட்டம்! நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை சமத்துவப் பொங்கலுடன் மிக விமரிசையாக கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர். இதில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், சிறிய கரண்டியில் எலுமிச்சம் பழம் வைத்து விளையாட்டு, லக்கி கார்னர் என மாணவியர் மிகச்சிறப்புடன் பொங்கல் கொண்டாடினர். இந்நிகழ்வில் டிரினிடி அகாடமி நிர்வாகத்தினர் ஆர்.குழந்தைவேல், கே.நல்லுசாமி, அருணா செல்வராஜ் மற்றும் முதல்வர், ஆசிரியப்பெருமக்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story