நாமக்கல் ஒன்றிய திமுக செயல்வீர்கள் கூட்டம்!

நாமக்கல் ஒன்றிய திமுக செயல்வீர்கள் கூட்டம்!

திமுக செயல்வீர்கள் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் ஒன்றிய திமுக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி , வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்தும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினர். இக்கூட்டமானது நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், ஒன்றிய திமுக செயலாளர் விகே.பழனிவேல் முன்னிலையில் நடைபெற்றது.நாமக்கல் ஒன்றிய கழக செயல்வீர்கள் கூட்டம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் தேவராஜன், மாவட்ட துணை செயலாளர் நலங்கில்லி,சேர்மன் கலாநிதி, நகர கழக செயலாளர்கள் பூபதி, சிவக்குமார், கிளை கழக செயலாளர்கள், கிளை பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story