நாமக்கல் : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திடீர் விசிட்

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு, மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நாமக்கல்லில் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்து மூத்த நிர்வாகிகளிடம் ஆசி பெற்றார்.

பாராளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய தகவல்-ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தனது சொந்த மாவட்டமான நாமக்கல்லுக்கு இன்று அதிகாலை (24.3.2024) வருகை தந்த அமைச்சர் எல். முருகன், தமது பூர்வீக கோவிலான பரமத்தி-வேலூர் அடுத்த கே. புதுப்பாளையத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு நரசிம்மர் சுவாமி திருக்கோவில் மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகியவற்றில் காலையில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார். பிறகு பாஜக முன்னோடிகள் மற்றும் மூத்தோர்களை சந்தித்த அமைச்சர் எல். முருகன் அவர்களிடம் ஆசி பெற்றார். இந்த நிகழ்வில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மனோகரன், நாமக்கல் நகர பாஜக தலைவர் சரவணன், மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story