நாமக்கல்: முருகன் கோவில்களில் வைகாசி கிருத்திகை சிறப்பு வழிபாடு!
வைகாசி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல்-மோகனூா் சாலை, காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி கிருத்திகையை முன்னிட்டு மூலவா் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.
மேலும், நாமக்கல்- கடைவீதி சக்தி விநாயகர் கோவில்,பாலதண்டாயுதபாணி சுவாமி, மோகனூா் காந்தமலை, நாமக்கல் கருமலை, கூலிப்பட்டி, சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. தங்கக் கவசம், வெள்ளிக்கவசம், திருநீா் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் முருகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Next Story