நாமக்கல் மேற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் வழிகாட்டுதல் படி தமிழ்நாடு முழுவதும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் இரா.குமரவேல் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான எழில்மாறன் செல்வேந்திரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பேசிய இராஜேஸ்குமார் எம்.பி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் தலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணியினர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரசின் சாதனைகளையும் திமுகவின் கொள்கைகளையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் அணியின் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நிகழ்ச்சிகள் நடத்தி அதில் பங்குபெறும் மாணவர்களுக்கு தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் சான்றிதழ் வழங்குவதோடு, மாவட்ட அளவில் முதல் மூன்று பரிசுகளை பெரும் மாணவ, மாணவிகளை மண்டல அளவிலான போட்டிக்கும், மாநில அளவிலான போட்டிக்கும் கலந்து கொள்ளும் வண்ணம் சிறப்பான முறையில் நடத்திட வேண்டும் என்றார்.
தொடர்ந்து அணியின் துணைச்செயலாளர் எழில்மாறன் செல்வேந்திரன் பேசும்போது, கலைத்துறை பிரச்சாரம் மட்டுமே இல்லாமல் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றை முன்னெடுப்பாக நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஆகியவரிடம் திமுகவின் கொள்கைகளை விளக்கி, எதிர்கால சந்ததியினருக்கு திராவிட மாடல் ஆட்சி குறித்து விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும். திராவிட இயக்கம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அம்பேத்கர், ஜவர்கலால் நேருவால் கொண்டு வரப்படாத சட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சட்டத்தைக் கொண்டு வந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தை எடுத்துச் செல்லும் வழியாக இந்த அணி திகழ வேண்டும். மாவட்டச் செயலாளர் வழிகாட்டுதலுடன் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்திட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கே.அய்யாவு, துணைத் தலைவர் டி.அருள், துணை அமைப்பாளர்கள் இரா.மேகநாதன், பூபாலன், சி.ஜெயக்குமார், ஸ்டாலின், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரிய நிர்வாக குழு உறுப்பினர் வே பிரபு,
நாமக்கல் மேற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வட்டூர் கண்ணன், தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் இளையப்பன், துணை அமைப்பாளர்கள் குமாரபாளையம் விடியல் பிரகாஷ், குமரவேல், அன்பழகன், சேகர், நல்லமுத்து, குப்புசாமி, ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.