பெண் தொழில் முனைவோருக்கு சான்றிதழ்!

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்.

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பயிற்சி முடித்த பெண்களுக்கு நாமக்கல்லில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் தேசிய வள அமைப்பான (National Resource organization) அகமதாபாத்தை சார்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்(Entrepreneurship Development Institute of India - EDII), நாமக்கல் மாவட்டதில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சியான ரசாயனமில்லாத அழகு சாதன பொருட்கள், சோப்பு, ஹேர் டை, பினாயில், பாத்திரம் மற்றும் தரை சுத்தம் செய்யும் பொருட்கள் குறித்து ஒரு மாத கால இலவச பயிற்சி அளிக்கப்பட்டுு வருகிறது.

இதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பெண்களுக்கு நாமக்கல் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் முனைவர், ஜெய்சங்கர் , அமிர்தா பயிற்சி மைய இயக்குனர்கள் செல்வி, நளினி ஆகியோர் சான்றிதழ் வழங்கினார்கள்.

நிறைவு விழா மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா தலைமையில் நடைபெற்றது. இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் முனைவர் ஜெய்சங்கர் தலைமையுரையில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் சமூக பங்களிப்பு திட்டத்தின் வாயிலாக இந்தியா முழுவதும் வருடத்திற்கு எட்டாயிரம் பெண்களுக்கு இலவச தொழில் மற்றும் திறன் பயிற்சி அளிப்பதுடன், பயிற்சி முடித்த பயனாளிகளுக்கு தொடர் ஆதரவு வீஆக்ட் துணை நிறுவனம் மூலம் சந்தை படுத்துதல் , வியாபார மேம்பாடு ஆகியவற்றை அளிக்கிறது. இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் சமூக பங்களிப்பு திட்டத்தின் வாயிலாக இதுவரை 52000 மேற்பட்டபெண்களுக்கு பயிற்சி அளித்து தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாக தெரிவித்தார்.

இதில் 45 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழ் நாட்டை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் Ministry of MSME, ONGC, HAL, HCL, HSBC, National SC ST HUB, Ministry of Tribal Affaris, National Women development corporation வாயிலாக பல்வேறு பயிற்சிகளை பெண்கள் மேம்பாட்டிற்க்காக நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

Tags

Next Story