ஐந்து பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து குற்ற சம்பவங்களை ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாம்பலப்பேட்டை பகுதியில் கடந்த 25.07.2023-ம் தேதி குமரன் என்ற குமரவேல் (47), த/பெ.நடராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டு இறந்த வழக்கில் கடந்த 08.10.23ம் தேதி 7 எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் 1. அரவிந்த் @ சேவு (27), 2. விக்கி @ விக்னேஷ்வரன் (26), 3. நவ்பல் (22), 4. ஞானசேகரன் (58), 5. விக்ரமன் (56), ஆகிய 5 எதிரிகள் மீதும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொது அமைதியை சீர்குலைக்கக்கூடிய செயலில் ஈடுபட்டதிற்கும், மேலும் இது போன்ற குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பதை தடுப்பதற்காகவும், மேற்படி நபர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீனிவாசபெருமாள், அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜெயசீலன், மேற்படி நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story