அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை

ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில் அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை இடம் பெற்றதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தென் தமிழகத்தின் பிரதான பேருந்து நிலையமாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு கொண்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் மதுரை கோட்டத்திற்கு உட்பட்டTN 57 N 2410 என்ற அரசு பேருந்தில் திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து என்று இடம் பெற்றிருக்கும் மின்னணு பெயர் பலகையில் சீன மொழி இடம் பெற்று இருந்தது.

அந்த அரசு பேருந்து சீன மொழியிலேயே திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சிக்கு சென்றதால் பேருந்தில் ஏற இருந்த பயணிகளும், காத்திருந்த பயணிகளும் தமிழ் சொற்களுக்கு பதிலாக சீன மொழி இடம்பெற்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தமிழ் நாட்டில் ஹிந்தி மொழிக்கே எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில் சீன மொழியுடன் அரசு பேருந்து இயங்கியது பெறும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது .

Tags

Read MoreRead Less
Next Story