ராசிபுரத்தில் நமிநந்தி அடிகள்-சேக்கிழார் குருபூஜை விழா கோலாகலம்

ராசிபுரத்தில் நமிநந்தி அடிகள்-சேக்கிழார் குருபூஜை விழா கோலாகலம்

சேக்கிழார் குருபூஜை விழாவில் பங்கேற்றவர்கள்

ராசிபுரத்தில் நமிநந்தி அடிகள்-சேக்கிழார் குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது.

ராசிபுரத்தில் நமிநந்தி அடிகள்-சேக்கிழார் குருபூஜை விழா கோலாகலம்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நமச்சிவாயா வாழ்க சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நமிநந்தி அடிகள், சேக்கிழார் குருபூஜை விழா கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்றது.

முன்னதாக விநாயகர், கைலாசநாதர், அறம்வளர் நாயகி, நந்தியெம்பெருமாள், சுப்பிரமணியர், 63 நாயன்மார்களுக்கு திருமஞ்சன அலங்காரம், பேரொளி வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. பின்னர் திருக்கோடி மகாதீபம் ஏற்றுதல், ஆலயம் முழுவதும்திரு விளக்கேற்றுதல்,

கைலாய வாத்தியங்கள் முழங்க திருக்கோடி தீபம் ஏற்றுதல், ஐம்பெரும் மூர்த்திகள், நமிநந்தி அடிகள், சேக்கிழார் திருமேனிகளுடன் கைலாய வாத்தியங்களுடன் 1008 விளக்கு திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

இதில் சிவன் மற்றும் பார்வதி வேடம் அணிந்து சிவனடியார் தொண்டர்களும் ஆடிப்பாடி உற்சாகமாக ஊர்வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கோவிலில் அன்னதானம் வழங்கினர்.

Tags

Next Story