சங்கரன்கோவில் 10ஆம் தேதி நம்ம எம்எல்ஏ நம்ம ஊரில் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி குருவிகுளம் ஒன்றியம், திருவேங்கடம் தாலுகா மற்றும் குருவிகுளம் காவல்துறை இதன் எல்லைகளுக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் பல்வேறு துறைகளில் பயன்பெற அறிவிக்கப்ட்டுள்ளது.
வருகிற 10ம் தேதி குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து நம்ம MLA நம்ம ஊரில் என்ற செயல்பாடு மூலம் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைக்க உள்ள நிலையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா தலைமை ஏற்க உள்ள நிலையில், இதில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களான நமது வாகை இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசின் பல்வேறு துறைகளில் இருந்து பல்வேறு சேவைகளுக்கு தீர்வுகள் காணப்படுகிறது. மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாற்றுத்திறனாளிகள் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேவை இருக்கும் மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம்.