விருத்தாச்சலத்தில் நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
உறுதிமொழி ஏற்பு
விருத்தாச்சலத்தில் நடந்த நம்ம ஸ்டிரீட் நிகழ்ச்சியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் சாலையில் நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடந்தது.இதில் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவிகள் உள்ளிட்ட அனைவராலும் போதைப் பொருட்கள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story