மதுரை மாநகரில் நடைபெற்ற நான் முதல்வன் கல்லூரி கனவு நிகழ்ச்சி

மதுரை மாநகரில் நடைபெற்ற நான் முதல்வன் கல்லூரி கனவு நிகழ்ச்சி

மதுரை மாநகரில் நான் முதல்வன் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.


மதுரை மாநகரில் நான் முதல்வன் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாநகரில் நடைபெற்ற நான் முதல்வன் கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று 15.05.2024 மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் "நான் முதல்வன் கல்லூரி கனவு" என்ற மாணவ, மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியானது மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகர துணை ஆணையர் வடக்கு அவர்கள் உடன் இருந்தார். இதில் 1300 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பொறியியல் , மருத்துவம் , சட்டம், பொருளாதாரம், கேட்டரிங், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பள்ளி படிப்பிற்கு அடுத்து தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளைக் குறித்து பயனுள்ள பல அறிவுரைகளையும், தகவல்களையும் வழங்கினர். மேலும் அரசு வேலைவாய்ப்பை பெறுவதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர். மேலும் கல்லூரி படிப்பிற்கு தேவையான கல்வி கடன் பெறும் வழிமுறைகள் குறித்து வங்கி மேலாளரால் எடுத்துரைக்கப்பட்டதுமேலும் இவ்வருடம் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை பாராட்டி நினைவு பரிசானது வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story