பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 14ல் நந்தி சேவை உற்சவம்

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 14ல் நந்தி சேவை உற்சவம்

நந்தி சேவை உற்சவம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வருகின்ற தமிழ்புத்தாண்டை முன்னிட்டு நந்தி சேவை உற்சவம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு, பிரம்மபுரீஸ்வரர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழு சார்பில், கடந்த 2020ல் 3 லட்சம் ரூபாய் செலவில், அத்தி மரத்தில் அதிகார நந்தி வாகனம் செய்யப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று அதிகார நந்தி சேவை உற்சவம் நடக்கிறது.

அதன்படி, நான்காம் ஆண்டு உற்சவம், தமிழ் புத்தாண்டு தினமான வரும் 14ல் நடக்கிறது. விழாவையொட்டி, வரும் 14ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு மூலவருக்கும், 3:00 மணிக்கு உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதிகாலை 4:00 மணிக்கு உற்சவருக்கு அலங்கார தீபாராதனையும், சென்னை டாக்டர் ராம்குமாரின் மேண்டலின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 6:00 மணிக்கு பிரம்மீச பெருமான் அதிகார நந்தி சேவையில் கோபுர தரிசனம் அளிக்கிறார்.

காலை 7:00 மணிக்கு, 400 சிவனடியார்கள் திருக்கயிலாய வாத்தியங்கள் இசைக்க, சிவ நடனம், சிலம்பாட்டம், குடை உற்சவம், புலி, மயில், மாடு, மரக்கால் ஆட்டம், கட்டை கூத்துடன் சுவாமி வீதியுலா நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு தமிழ்ப் புத்தாண்டு பலன் வாசித்தலும், தொடர்ந்து, பெருநகர் கலைகாவிரி நாட்டியாலயா மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை அறங்காவலர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து செய்துள்ளனர்.

Tags

Next Story