சுசீந்திரம் வந்த முன்னுதித்த நங்கை அம்மன் சிலை

சுசீந்திரம் வந்த முன்னுதித்த நங்கை அம்மன் சிலை

சுசீந்திரம் வந்த அம்மன் சிலை


திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக பத்மநாபபுரத்திலிருந்து சரஸ்வதி தேவியும், வேளிமலை யில் இருந்து முருகனும், சுசீந்தி ரத்தில் இருந்து முன்னுதித்தநங்கை அம்மனும் ஆண்டுதோறும் பவனி யாக கொண்டு செல்லப்படும். இந்த ஆண்டும் சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு நடந்த பூஜைக்கு பிறகு விக்ரகங்கள் திருவனந்த புரத்திலிருந்து மீண்டும் தமி ழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழகம் கொண்டுவரப்பட்ட விக்ரகங்களுக்கு குமரி மாவட்ட எல்லையில் இரு மாநில போலீசார் மரியாதை அளித்தனர். பின்னர் அங்கிருந்து சாமி விக்ரகங்கள் அங்கிருந்து புறப்பட்டது. தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி சிலைகள் பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் ஆலயத்திற்கும், குமாரகோவில் முருகன் விக்ரகங்கள் குமாரகோவிலுக்கும் கொண்டு செல்லப்பட்டது.

முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகங்கள் இன்று காலை அங்கிருந்து கொண்டு வரப்பட்டது. பார்வதிபுரம் நாகர்கோவில் இடலாக்குடி வழியாக சுசீந்திரம் வந்தடைந்தது. சுசீந்திரம் கோவில் நுழைவு வாயிலில் இரு மாநில போலீசார் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முன்னுதித்த நங்கை அம்மன் 4 ரத வீதிகள் வழியாக கோவிலுக்கு கொண்டு வரப்பட் டது. கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு சுவாமி கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags

Next Story