நஞ்சைகாளிகுறிச்சி ஸ்ரீ குங்குமக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நஞ்சைகாளிகுறிச்சி ஸ்ரீ குங்குமக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நஞ்சை காளிக்குறிச்சி கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ குங்கும காளியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு, நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா, அதிகாலை மங்கல இசை உடன் துவங்கியது. பின்னர் விநாயகர் வழிபாடு நடைபெற்று, யாக வேள்வியில் பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் சிவாச்சாரியார்கள் ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, க. பரமத்தி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story