போதை பொருள் நீதிபதி முன்பு ஒப்படைப்பு!

இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருள் நீதிபதி முன்பு ஒப்படைப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இலங்கைக்கு கடத்த இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் மற்றும் ரூ.1.05 கோடி மதிப்பிலான 874 கிலோ கஞ்சா மற்றும் 100 கிலோ போதைப் பொருட்களை கடந்த 10-ம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் அடுத்த அரசங்கரை கடற்கரை பகுதியில் உள்ள இரால் பண்ணை ஒன்றில் கிலோ கணக்கில் கஞ்சா இருப்பதாகவும், அதனை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த தயாராக சிலர் உள்ளதாக மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அரசங்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணைகளில் கடந்த 10ஆம் தேதி மீமிசல் காவல் துறையினர் உதவியோடு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அங்கே இருந்த இறால் பண்ணை ஒன்றில் படகுகள் மூலமாக இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த 110-கோடி மதிப்புடைய 100-கிலோ எடை கொண்ட ஹசீஸ் மற்றும் ரூ.1.05 இலட்சம் மதிப்புடைய 872 கிலோ கஞ்சாவை கண்டறிந்தனர். கண்டறியப்பட்ட கஞ்சாவை கைப்பற்றி பறிமுதல் செய்த மத்திய சுங்கத்துறை நுன்னறிவு பிரிவினர் அவற்றை ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த கஞ்சா கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினம் பகுதியைச் சேர்ந்த இறால் பண்ணை உரிமையாளர் அமீர் சுல்தான் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவர் தலைமறைவாகியுள்ள நிலையில், இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் மற்றும் ரூ.1.05 கோடி மதிப்பிலான 874 கிலோ கஞ்சா மற்றும் 100 கிலோ போதைப் பொருட்களை இன்று அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் டாட்டா ஏசி வாகனம் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றம் கொண்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் நீதிபதி பாபுலால் முன்பு ஒப்படைக்கப்பட்டது... அதில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் நீதிமன்றம் சார்பாக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story