திருச்சுழியில் நாதக வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருச்சுழியில் நாதக வேட்பாளர் அறிமுக கூட்டம்
X

வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருச்சுழி தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அல்லிமுத்து நாடார் தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி சார்பில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் டாக்டர். சந்திர பிரபா போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டமானது திருச்சுழி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக திருச்சுழி யில் உள்ள காமராஜர் சிலை, முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர். திருமதி. சந்திர பிரபா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் வட்டாட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி, விருதுநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் செந்தில் குமார்,

திருச்சுழி தொகுதி செயலாளர் முனியசாமி, திருச்சுழி தெற்கு தொகுதி தலைவர் ஜோதிலிங்க கருப்பசாமி ஆகியோர் வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு தலைமை வைத்தனர். மேலும் திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார், திருச்சுழி தெற்கு ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் இந்த கூட்டத்திற்கு முன்னிலை வைத்தனர்.

மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story