மதுரையில் மயங்கி வேட்பு மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளர் சத்யா
வேட்புமனு தாக்கல் செய்த நாதக வேட்பாளர்
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி உடல்நல குறைவு காரணமாக 3 மணி நேரம் காத்திருந்து தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தாக்கல் செய்தார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை வடபழஞ்சி அருகே உள்ள மணப்பட்டியை சேர்ந்த சத்யா தேவி என்பவர் போட்டியிடுகிறார், சத்யா தேவி அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்,
மேலும் சத்யா தேவி நடிகர் பரணியின் உடன் பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது, வேட்புமனூர் தாக்கல் செய்வதற்காக வேட்பாளர் சத்யா தேவி தமுக்கம் மைதானத்தில் இருந்து விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படத்துடன் 100 க்கும் மேற்ப்பட்ட இரு சக்கர வாகனங்களுடன் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக வந்து தமிழன்னை மற்றும் திருவள்ளூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்,
ஏற்கனவே இரண்டு நாட்களாக உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் நாற்காலி போட்டு அமர்ந்து விட்டார், பின்னர் வேட்பாளர் சத்யா தேவியை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சத்யா தேவி ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார்,
சோர்வாக அமர்ந்து ஓய்வெடுப்பதை வீடியோ, போட்டோ எடுப்பதை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர் சத்யாதேவி மாவட்ட ஆட்சியர் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றனர், அங்கே பார்வையாளர் பகுதியில் அமர வைக்கப்பட்ட சத்யா தேவி வேட்பு மனு தாக்கல் செய்யாமல் காத்திருந்தார்,
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு படிவம் ஒன்று தயாராகிக் கொண்டிருப்பதாகவும் படிவம் தயாராகி வந்த பின்பு கையொப்பமிட்டு வேட்பு மனு தாக்கல் செய்வார் என கூறினார்கள், காலை 10 மணிக்கு ஊர்வலத்தை தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 11.30 மணி அளவில் வந்த சத்யா தேவி ஒரு வழியாக இரண்டு மணி அளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பு உணவை தாக்கல் செய்திருப்பதாகவும் உடல்நிலை குறைவு காரணமாக இரண்டு நாட்களில் செய்தியாக அதை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்