அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அக்னிசட்டி நேர்த்திக்கடன்

நத்தம் மீனாட்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா மார்ச் 31ம் தேதி காலை சந்தன கருப்பு சுவாமி கோயிலிலிருந்து தீர்த்தம் அழைத்தல் வருதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நத்தம் மீனாட்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா மார்ச் 31ம் தேதி காலை சந்தன கருப்பு சுவாமி கோயிலிலிருந்து தீர்த்தம் அழைத்தல் வருதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து ஏப்.5ம் தேதி தோரண மரம் ஊன்றுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏப்.7ம் தேதி இரவு அம்மன் குளத்திலிருந்து கரகம் பாவித்து அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அரண்மனை பொங்கல், மாவிளக்கு, வாணவேடிக்கைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அன்னதானம் நடந்தது. அன்றிரவு ஊர் மாவிளக்கு நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை அம்மன் குளத்திலிருந்து பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்து வந்தனர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Tags

Read MoreRead Less
Next Story