நத்தம் : புரவி சிலையை உடைத்தவர் கைது

நத்தம் : புரவி  சிலையை உடைத்தவர் கைது
X

கைது 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை களத்துபட்டி, கோவில்பட்டி கிராம மக்களிடையே திருவிழா கும்பிடுவதில் பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுடன் கடந்த 9-ம் தேதி கோவில்பட்டி கிராம மக்கள் போலீஸ் பாதுகாப்புடன் திருவிழா கொண்டாடி முடிமலை ஆண்டவர் கோவிலில் புரவி எடுப்பு சிலைகளை வைத்தனர். தொடர்ந்து அன்று இரவு புரவி சிலைகளை மர்ம நபர்கள் யாரோ உடைத்து விட்டனர். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிராம மக்கள் நத்தம் போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் களத்துபட்டியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சிலைகளை உடைத்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அதன் பேரில் பழனிச்சாமியை கைது செய்த நத்தம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story