தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தடய அறிவியல் பிரிவு சார்பில் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் தேசிய மாணவ படை ஏர்விங் 5 தமிழ்நாடு கட்டளை அதிகாரி முருகானந்தம் மற்றும் சார்ஜென்ட் சுமன் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம், தேசிய நல்லிணக்க மேம்பாட்டில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து விளக்கி பேசினர். இதில் துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மேலும் இத்தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கவிதை, படவிளக்க போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை துறையின் நாட்டு நல பணித்திட்ட ஒருங்கினைப்பாளர் தனசேகர், தடய அறிவியல் பிரிவு பொறுப்பாளர் மோகன் மற்றும் உதவி பேராசிரியைகள் லின்சி, சாண்ட்ரா, ராஜஸ்ரீ, அமிதா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story