தேசிய கலை பண்பாட்டு விழா

தேசிய கலை பண்பாட்டு விழா

தேசிய கலை பண்பாட்டு விழா

சுரண்டையில் தேசிய கலை பண்பாட்டு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சுரண்டை டாக்டா் அப்துல் கலாம் முதியோா் இல்ல அறக்கட்டளை, சுரண்டை செம்மொழி தமிழ் சங்கம் மற்றும் ஸ்ரீஅன்னலட்சுமி கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, குலையநேரி கிராம நிா்வாக அலுவலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். சுரண்டை நகா்மன்ற துணைத்தலைவா் ந.சங்கராதேவி, சுகாதார ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்துல் கலாம் முதியோா் இல்ல அறக்கட்டளை நிா்வாகி அமல்ராஜ் வரவேற்றாா். சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் ரா.சின்னத்தாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கலை மற்றும் பண்பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். சுரண்டை தொழிலதிபா் ஆறுமுகம், மேலக்கலங்கல் சரவணவேல் முருகையா ஆகியோா் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சமூக ஆா்வலா்களுக்கு விருதுகள் வழங்கினா். விழாவில் பண்பாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளா் மாணிக்க செல்வம், அன்னலட்சுமி கல்வி நிறுவன நிா்வாகி வைரமுத்து, இலஞ்சி டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி தாளாளா் ராஜகுமாா், பேராசிரியா் திருநாவுக்கரசு, ஆா்.சி. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் சிறிய புஷ்பம் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story