கொங்கு கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த இ - பைக்கிற்கு தேசிய விருது !

கொங்கு கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த இ - பைக்கிற்கு தேசிய விருது !

இ - பைக்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த இ-பைக்கிற்கு தேசிய அளவிலான விருது கிடைத்துள்ளது.
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த இ-பைக்கிற்கு தேசிய அளவிலான விருது கிடைத்துள்ளது. ஐஎஸ்ஐஈ இந்தியா அமைப்பின் சார்பில், போபாலில் உள்ள ஐஈஎஸ் பல்கலைக்கழகத்தில் புதிய இ-பைக் கண்டுபிடிப்புகளுக்கான போட்டி நடந்தது. திறமையான பொறியாளர்கள் மற்றும் தொழில் முனைவோரை உருவாக்குதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார நகர்வு ஆகியவற்றில் சமுதாயத்தின் ஆர்வத்தை இயந்திரப் பொறியியல் மற்றும் வளர்க்கவும், இ- பைக்கில் புதுமையைக் கொண்டு வருதல் உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இயந்திர மின்னணு பொறியியல் மாணவர்கள், பேராசிரியர் என்.நித்தியவதி, எஸ்.தங்கவேல் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தாங்கள் வடிவமைத்த இ- பைக்கை காட்சிப்படுத்தினர். இதில், 'பெஸ்ட் ஏசிலரேசன்' விருது மற்றும் பியூச்சர் விருது மற்றும் ரூ 10 ஆயிரம் ரொக்கப்பரிசை இந்த மாணவர் குழு பரிசு வென்றது. பெற்றோர், கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் பாலுசாமி மற்றும் ஆர்.பரமேஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்

Tags

Next Story